விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்


விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்
x

கரூர் கூட்டநெரிசலில் பலியான விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்ச இழப்பீட்டை பெண் ஒருவர் திருப்பி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்,

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதையடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய் மிகுந்த வேதனையுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து, தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவியான சங்கவி, விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; கரூர் நெரிசலில் என் கணவன் ரமேஷ் உயிரிழந்தார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சங்கவி என்ற பெண் கூறினார்.

1 More update

Next Story