தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா? பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி


தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா?  பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 2 March 2025 7:29 AM (Updated: 3 March 2025 1:20 AM)
t-max-icont-min-icon

தமிழக வெற்றிக்கழகத்தின் 2026-ம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு குறித்து தந்தி டி.வி.க்கு பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் 2026-ம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு குறித்து தந்தி டி.வி.க்கு பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார்.

தந்தி டி.வி.க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியின் விவரம் வருமாறு:-

நான் விஜய்யுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பேச ஆரம்பித்தேன். சில காலமாகவே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரும் இளைஞர் ஆதரவை பெற்று உச்சம் பெற்றவர் நடிகர் விஜய் என்ற முறையில் அவரை நான் பார்த்து பேசியிருக்கிறேன். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விஜய் உருவெடுக்க போகிறார். அவர் பிரபலமே அவருக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த துறையில் எனக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு வலு சேர்க்க விரும்புகிறேன். அவரும் எனக்கு பீகாரில் உதவுவார். பீகாரில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் பீகாரின் தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தரும். பொறுத்திருந்து பாருங்கள். நான் பேசியதில் இருந்து விஜய் தனித்து நிற்கவே விரும்புகிறார் என நினைக்கிறேன். அது மாறும் என்று எனக்கு தோன்றவில்லை. குறைந்தபட்சம் டிசம்பர் வரை மாற்றம் கிடையாது. விஜய் தனித்து நின்றால் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.

இந்த நேர்காணலை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். தீவிரமாக உழைத்தால் அவர் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைத்தால், தி.மு.க. கூட்டணி அப்படியே தொடர்ந்தால், த.வெ.க. தனித்து போட்டியிட்டால் எழுதி வைத்து கொள்ளுங்கள் விஜய்யின் வெற்றி பிரகாசமாக இருக்கும்" இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story