விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய காட்டுயானை: கோவையில் ஆச்சரியம்


விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய காட்டுயானை: கோவையில் ஆச்சரியம்
x

கோவையில் காட்டுயானை ஒன்று விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

கோவை,

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் அந்த யானைகள் விவசாய தோட்டங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் காருண்யா நகரை அடுத்த சத்யா அவென்யூ பகுதியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டின் பின்பக்க நுழைவு வாயிலை காட்டுயானை ஒன்று உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் சிறிது நேரம் வீட்டு வளாகத்தில் உலா வந்தது. தொடர்ந்து முன்பக்க நுழைவு வாயில் வழியாக வீட்டை விட்டு வெளியே வந்தது.

அதற்கு முன்பாக, வீட்டு வளாகத்தில் இருந்த விநாயகர் சிலையை துதிக்கையால் தொட்டு வணங்கியது. இது தொடர்பான காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story