ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்


ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்
x

காட்டு யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை, சாலைகளில் ஒய்யாரமாக உலா வந்தது. அப்போது தனது பின்னால் யானை வருவதை அறிந்த அதே ஊரைச் சேர்ந்த சிறுவன், யானையிடமிருந்து தப்பிக்க ஓடினான். வேகமாக ஓடிய பொழுது திடீரென கீழே தவறி விழுந்த சிறுவன், மேலும் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடினான். இதனால் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் யானையிடமிருந்து தப்பித்தான்.

இந்த வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதால் அந்தப் பகுதி மக்களிடையே கடும் அச்சம் நிலவுகிறது. ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய நிலையில், அது மீண்டும் வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Next Story