நீலகிரியில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதிர்காடு, சந்தகுன்னு, முக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. பொதுமக்கள், வாகனங்களை தாக்கி வருகிறது. கூடலூர், பந்தலூர் வழியாக சுல்தான்பத்தேரி செல்லும் சாலையை வழிமறித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
சமீபத்தில் சந்தகுன்னு பகுதியை சேர்ந்தஜோய் (வயது 60) என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இந்தநிலையில் பிதிர்காடு அரசு தொடக்க பள்ளி அருகே ஒற்றை யானை பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story






