அமித்ஷா வருகை எதற்காக? அண்ணாமலை விளக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
சென்னை,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தமிழகத்தின் புதிய பா.ஜ.க. தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். இதனால் அந்த பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.
இந்தநிலையில், பாஜக மாநிலத்தலைவர் நிகழ்விற்கும், மத்திய மந்திரி அமித்ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை. அமித்ஷா வருகையின்போது மாநிலத்திற்கான புதிய தலைவர் அறிவிப்பு, அதிமுக சந்திப்பு இருக்குமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லதுதான் செய்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் நல்லது. தற்போது நீட் தேர்வை பற்றி திமுக பேசுவது தேவையற்ற ஒன்று என்றார்.