நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாதது ஏன்? - விஜய்க்கு சீமான் கேள்வி


நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாதது ஏன்? - விஜய்க்கு சீமான் கேள்வி
x
தினத்தந்தி 21 Sept 2025 3:54 PM IST (Updated: 21 Sept 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும் என சீமான் கூறினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

டிஎன்பிஎஸ்சி தேர்வு சரியாக நடத்தப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டிற்கு யார் காரணம்.

தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது. விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாதது ஏன்? விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் பேசுவதைகேட்க கூடுவார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story