10 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது.
சென்னை,
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
10 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்புவது பற்றி பேசப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. மூலமாக 6 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு முடிந்து, நியமன தேதியை முடிவு செய்து, பணி உத்தரவை வழங்கும் நிலையில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வழக்கு தொடர்ந்து விட்டனர்.
வருகிற 21-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் படிப்படியாக பணி நியமனம் செய்யப்படும். தற்காலிக ஆசிரியர் மூலமாக பாடங்களை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story