ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? என்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தபோது சிலர் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அளித்த பதில் வருமாறு:-

தேர்தல் நடத்தக்கூடாது என்ற எண்ணம் இல்லை. தற்போது மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அருகேயுள்ள ஊராட்சி பகுதிகளை இணைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சாதிவாரியான சுழற்சி புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டும். இன்னும் 9 மாவட்டங்களில் ஒரு ஆண்டு பதவி காலம் உள்ளது.

பல பெரிய ஊராட்சிகளையும், ஊராட்சி ஒன்றியங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபற்றிய குழு உள்ளது. சிலர் இணைக்க வேண்டாம் என்று கருத்து கூறி வருகின்றனர். இறுதியில் கலெக்டரின் ஆலோசனை பெறப்பட்டு முடிவு செய்யப்படும். இரண்டு துறை அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை மேற்கொள்வார்கள். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story