மதுக்கடையை அதிகரித்துவிட்டு, குடி குடியை கெடுக்குமென செய்யும் விளம்பரத்தால் என்ன பயன்? - மதுரை கோர்ட்டு
குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்படு வருகிறது. அந்த பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளது. மேலும், அங்கு ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 4வதாக ஒரு கடை தேவை இல்லை. புதிய டாஸ்மாக் திறப்பதை தடை செய்ய வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வழக்கு விசாரணையின்போது, "குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழிபாருங்கள், மூலைமுடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்?" என்று சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.