ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன?... அறநிலையத்துறை விளக்கம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன?... அறநிலையத்துறை விளக்கம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். கோவில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஆண்டாள் கோவிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்டப வாசல்படி ஏறியபோது, அர்த்த -மண்டபம் முன் நின்று தரிசனம் செய்யலாம் என கூறினார். ஜீயர் கூறியதை ஏற்றுக் கொண்டு இளையராஜாவும் அர்த்த மண்டபத்தின் முன் நின்று தரிசனம் செய்தார். ராமானுஜ ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story