'பா.ஜ.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம்' - நயினார் நாகேந்திரன்


பா.ஜ.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் - நயினார் நாகேந்திரன்
x

முருகன் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. கூட்டணியை உடைக்க முடியாது என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருகன் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"எங்கள் கூட்டணி உறுதியானது, இறுதியானது. பா.ஜ.க. கூட்டணியை சிதைக்க வேண்டும் என்பதில் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அது நிச்சயமாக நடக்காது. மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிக்கப்போகும் கட்சியின் பக்கம்தான் எல்லோரும் வருவார்கள். எனவே, பா.ஜ.க. கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம்."

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 More update

Next Story