காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும்: துரை வைகோ


காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி நிரந்தரமான  தீர்வை வழங்க வேண்டும்: துரை வைகோ
x

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காலநிலை மாற்றத்தால் உரிய நேரத்தில் போதிய பருவ பருவ, புயல், வெள்ளம் போன்ற காலங்களில் அழிவுகள் அழிவுகள் பொருட்களுக்கு பொருட்களுக்கு ஒன்றிய அரசு சரியான குறைந்தபட்ச ஆதார விலையை விவசாய விவசாய விவசாய விவசாய போன்ற பல காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய காலத்தில், விவசாயம் காட்டுப்பன்றிகளால் முழுவதுமாக அழிந்துவிடும் ஆபத்து ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் தொடங்கி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட, சுமார் 70 விழுக்காடு மாவட்டங்களில் இந்த காட்டுப்பன்றிகளின் பெருக்கத்தால் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பயிர்கள் நாசமாகின்றன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இது மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவதை, கடந்த 20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரை நான் நேரில் சந்தித்து, கேரள அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொண்டது, அதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதை அறிந்து கேட்டுக்கொண்டேன்.

இதன் தொடர்ச்சியாக, 09.01.2023 அன்று அன்றைய வனத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன் அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து விரிவான மனுவை அளித்திருந்தேன். இதற்கு நிரந்தர தீர்வு காண அமைச்சரையும் அதிகாரிகளையும் நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளின் விடியலுக்கு வழி வகுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரம், அதிகமாக இனப்பெருக்கத்தால் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையும் அதன் பரவலும் கட்டுக்கடங்காமல் அதிகமாகிவிட்டதையும் நான் கவனிக்க விரும்புகிறேன். காப்புக்காடுகளிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் ஊடுருவினால் வனத்துறையின் மூலம் அவற்றை சுடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது. தற்காலிகமாக, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையை உடனடியாக செயல்படுத்துவதுடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முழுமையான தீர்வு காணவும், அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதுடன், விவசாயப் பெருமக்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பீகார் போன்ற வடமாநிலங்களில் காட்டுப்பன்றிகளை யார் வேண்டுமானாலும் கொல்ல மத்திய அரசு ஒரு வருட காலத்திற்கு அனுமதி அளித்ததைப்போல, தமிழ் நாட்டிற்கும் அப்படியான அனுமதியை மத்திய அரசிடம் எடுத்துரைத்து பெறவேண்டும். அப்படி பெற்று, ஓராண்டு காப்புக்காடுகளை விட்டு மூன்று கி.மீ தொலைவிற்கு வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை யார்வேண்டுமானாலும் கொல்ல அனுமதித்தால் மட்டும் தான் மிக அதிகமாக இனப்பொருக்கம் செய்யும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க முடியும் என்பதை எனது வேண்டுகோளாக தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story