தேச நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த விவேகானந்தர் நினைவைப் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை

ஆழ்ந்த ஆன்மிகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கியவர்.
சென்னை,
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் கலாச்சாரத்தையும்,, உயரிய ஆன்மிகக் கோட்பாடுகளையும், உலக அரங்கில் கொண்டு சென்று பெருமை சேர்த்த வீரத் துறவி, சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் இன்று.
ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மிக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் கொடுத்தவர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் திகழ்ந்தவர். தன்னுடைய ஆழ்ந்த ஆன்மிகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கியவர்.
தேச நலனுக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சுவாமி விவேகானந்தரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






