மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.65 அடியில் இருந்து 115.31 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 758 கன அடியில் இருந்து 745 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூரில் பாசன தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக குறைந்துள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 86.18 டிஎம்சியாக உள்ளது.


Next Story