மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

கோப்புப்படம் 

நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 828 கனஅடியாக குறைந்து உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,791 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குறிப்பாக நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 828 கனஅடியாக குறைந்து உள்ளது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 12,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 118.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலையில் 117.87 அடியாக குறைந்தது.


Next Story