சென்னையில் வார்டு வாரியாக சிறப்பு குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு - மேயர் பிரியா தகவல்


சென்னையில் வார்டு வாரியாக சிறப்பு குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு - மேயர் பிரியா தகவல்
x

சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. அப்போது, 72-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரவணன் பேசியதாவது:-

"என்னுடைய வார்டில் மட்டும் 100 சிறப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு சிரமம் உள்ளது. எனவே, சிறப்பு குழந்தைகளுக்கான வகுப்பறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "சிறப்பு குழந்தைகள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுக்கப்படும். அதன்பின்னர், அவர்களுக்கான சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story