வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: விஜய் கட்சியினருக்கு வேண்டுகோள்
சிறப்பு முகாம்கள் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இம்மாதத்தில் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள 7 தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரசாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story