விஜய் விரைவில் கரூர் செல்கிறார்; போலீசாரிடம் அனுமதி கோர முடிவு


விஜய் விரைவில் கரூர் செல்கிறார்;  போலீசாரிடம் அனுமதி கோர முடிவு
x
தினத்தந்தி 28 Sept 2025 6:47 PM IST (Updated: 28 Sept 2025 7:08 PM IST)
t-max-icont-min-icon

பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை:

கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதியுதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.

1 More update

Next Story