அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் பகுதிக்கு வந்த தவெக தலைவர் விஜய் அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைபடம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.