விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல்; அமைச்சர்கள் உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் உத்தரவு

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார்.
கரூர்,
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. இந்நிலையில், விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதுபற்றி மாவட்ட கலெக்டரை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட் ஆசீர்வாதம் சம்பவ பகுதிக்கு செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.






