விஜய்யை விமர்சித்த வேல்முருகன்; மாணவி கொடுத்த பதிலடி


விஜய்யை விமர்சித்த வேல்முருகன்; மாணவி கொடுத்த பதிலடி
x
தினத்தந்தி 13 Jun 2025 4:06 PM IST (Updated: 13 Jun 2025 4:08 PM IST)
t-max-icont-min-icon

'விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம்' என மாணவி தெரிவித்தார்.

சென்னை,

அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் மாணவிகளின் தோளில் கை போட்டதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு பள்ளி மாணவி பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யிடமிருந்து கல்வி விருது வாங்கியபோது மாணவி பேசியதாவது;

"பரிசு வழங்கும்போது விஜய் மாணவிகளின் தோளில் கை போடுவதாக பேசி சில வீடியோக்கள் வந்ததை பார்த்தேன். விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம். விஜய்யை நாங்கள் அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக நினைக்கிறோம். இப்படியெல்லாம் பேசக்கூடாது. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் அப்பா.."

இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

1 More update

Next Story