நீலகிரி எல்லையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்: சுற்றுலா பயணிகள் அவதி

சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி,
இ-பாஸ், வரி வசூல், பிளாஸ்டிக் ஆய்வு நடைபெற்று வருவதால் தமிழக- கேரள எல்லை பகுதியான நாடுகாணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி , கொடைக்கானலில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் இபாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளதுஇந்நிலையில் நாடுகாணி சோதனை சாவடியில் இ பாஸ், வாகன வரி, என தனித்தனியாக ஆய்வு நடைபெற்று வரும் சூழலில் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story