தவெக மாநாட்டுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தினர் : ஆதவ் அர்ஜுனா தாக்கு


தவெக மாநாட்டுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தினர் : ஆதவ் அர்ஜுனா தாக்கு
x

எம்ஜிஆர் ஜெயலலிதா கொள்கையிலிருந்து அதிமுக தடம் மாறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

கருணாநிதி தன்னை சுற்றி உள்ள 10 குடும்பத்துக்கும் சேர்ந்த ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ஆனால் மு. க. ஸ்டாலின் அந்த 10 குடும்பங்களை ஒழித்துவிட்டு இரு குடும்பத்தை மட்டும் வளர்த்துள்ளார். மருமகள் மகன் ஆகிய குடும்பங்களை ஒரு குடும்பமாக ஊழல்களை உருவாக்கி சமூக நீதி மறந்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை உருவாக்கினார். அந்த தடைகளை தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் உடைத்து தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

மருமகனும், மகனும் மிகப்பெரிய ஊழலை செய்து விட்டதாக கருத்து தெரிவித்த பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். அமைச்சர் மூர்த்தி சமூக நீதி காவலரா, ஒட்டுமொத்த ஊழலையும் குடும்பத்துக்கு அளிக்கக்கூடிய அமைச்சரவையே திமுக அரசு உருவாக்கியுள்ளது. அண்ணாவின் கொள்கையில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகமும், மு. க. ஸ்டாலினும் விலகி விட்டனர். அண்ணாவின் கொள்கைகளை கழகத்தில் கடைபிடிக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் கொள்கை ஒன்று தான் என்று கூறலாம்.

இதே போல, எம்ஜிஆர் ஜெயலலிதா கொள்கையிலிருந்து அதிமுக தடம் மாறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் தமிழகத்தில் பின்புறமாக ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவுக்கு அதிமுக உதவி வருகிறது. அண்ணா மற்றும் எம்ஜிஆரின் கொள்கைகளை உள்வாங்கி அரசியல் வெற்றியாக மாற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று விஜய் முதல் அமைச்சர் ஆவார்” என்றார்.

1 More update

Next Story