பொங்கல் அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்


பொங்கல் அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்
x
தினத்தந்தி 11 Jan 2025 8:45 PM IST (Updated: 11 Jan 2025 8:45 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டிருப்பதாவது;

பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பொங்கல் தினங்களில் பார்வையாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு;

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா (செவ்வாய்கிழமை) இறக்கப்படும். 14.01.2025 பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள் (UPI, WhatsApp) மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும். உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும்.

பார்வையாளர்கள் பிளாஸ்டிக் நிரம்பிய உணவுப் பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மந்தி, சிங்க வால் குரங்கு, இந்தியக் காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற அரிய வகை இனங்களில் சமீபத்தில் பிறந்தவை. பார்வையாளர்கள் பூங்காவில் காணலாம். க்ரிபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் மற்றும் அனுமான் குரங்கு போன்ற சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கலாம். பார்வையாளர்கள் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக விலங்குகளை கிண்டல் செய்யவோ அல்லது உணவளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பூங்கா நிர்வாகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story