நயினார் நாகேந்திரன் தலைமையில், தமிழ்நாடு பாஜக மிகச் சிறந்த வெற்றிகளைப் பெறும் - அண்ணாமலை


நயினார் நாகேந்திரன் தலைமையில், தமிழ்நாடு பாஜக மிகச் சிறந்த வெற்றிகளைப் பெறும் - அண்ணாமலை
x
தினத்தந்தி 12 April 2025 10:58 PM IST (Updated: 12 April 2025 11:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

தமிழக பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது;

மாநிலத் தலைவராக, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர், நயினார் நாகேந்திரனை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ள அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நயினார் நாகேந்திரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறனும், நமது கட்சியை தமிழகத்தில் மேலும் வலிமையான சக்தியாக எடுத்துச் செல்லும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது;

நயினார் நாகேந்திரன் தலைமையில், தமிழ்நாடு பாஜக மிகச் சிறந்த வெற்றிகளைப் பெறும் என்பதும், நமது பிரதமர் நரேந்திர மோடியின், வளர்ந்த தமிழகம், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது கட்சி இன்னும் வேகமாக பயணிக்கும் என்பதும் உறுதி."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story