துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு


துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2025 1:33 PM IST (Updated: 3 Jun 2025 6:21 AM IST)
t-max-icont-min-icon

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதல்-அமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story