புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகம்: உதயநிதி திறந்து வைத்தார்


புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகம்: உதயநிதி திறந்து வைத்தார்
x

திராவிட மாடல் அரசு பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என உதயநிதி தெரிவித்துள்ளார் .

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நம் திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை அருகே ரூ.38.40 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை இன்று திறந்து வைத்தோம்.

இந்நூலகத்தில், சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திடும் வகையில் Comics Corner உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மெரினா கடற்கரைக்கு வருகிற பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story