'அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு...' - தொல்.திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு


அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு... - தொல்.திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2024 9:14 PM IST (Updated: 6 Dec 2024 9:19 PM IST)
t-max-icont-min-icon

தொல். திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் , முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது,

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்றும் நாம் அனைவருக்கும் தெரியும். அதை கண்டுக்கொள்ளாமல் மேல் இருந்து ஒரு அரசு நம்மை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று நாம் அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோன்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்.

சம்பிரதாயத்திற்காக டுவிட் போடுவதும், அறிக்கை விடுவதும், மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்' என்றார்.


Next Story