த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்


த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்
x
தினத்தந்தி 17 Oct 2024 3:52 PM IST (Updated: 17 Oct 2024 6:03 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர். எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக. புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொருள்:- இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை. கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை. சமூக பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது. வெற்றிக் கொள்கைத் திருவிழா விளக்கவுரை. மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story