திருச்சி: நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம்


திருச்சி: நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2025 11:02 AM IST (Updated: 17 Feb 2025 11:56 AM IST)
t-max-icont-min-icon

நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்தது.

இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலான நிலையில் காமராஜரை பணி நீக்கம் செய்து மன்னச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 More update

Next Story