விழுப்புரத்தில் இருமார்க்கமாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கம்


விழுப்புரத்தில் இருமார்க்கமாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கம்
x

விழுப்புரத்தில் இருமார்க்கமாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையினால் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையினால் விக்கிரவாண்டி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே பாலத்தை ஒட்டி மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. மேலும் கனமழை காரணமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன், சோழன், தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், பெஞ்சல் புயல் கனமழையால் விழுப்புரம் பகுதியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு உள்ளிட்டவை சரிசெய்யப்பட்டதால், இருமார்க்கமாகவும் ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அதைபோல சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள், பிற மாவட்டங்களுக்கும் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே பாலத்தில் ரெயில்கள் மிகவும் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.


Next Story