கடலூர் அருகே சோகம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை


கடலூர் அருகே சோகம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
x

கோப்புப்படம்

குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மாளிகைபுர மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். எலக்ட்ரிசியனான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையிலும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த நித்யா தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொதுகிணற்றில் குதித்துள்ளார். இதில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணற்றில் சடலங்கள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story