தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி


தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
x

மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சையிலிருந்த போது அதிா்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்தாா். இதனை தொடா்ந்து இளைஞரும் உயிரிழந்தாா் .

தேனி மாவட்டம், கம்பம் கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் முபாரக் அலி (68). இவரது மகன் முகமது இா்பான் (24). இவா், கடந்த 6 -ஆம் தேதி சுப்பிரமணி கோவில் தெருவிலுள்ள உறவினா் வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்துக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை தூக்கியபோது மின் கம்பியில் பட்டு தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.

இவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதை அறிந்த அவரது தந்தை முபாரக் அலி அதிா்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மகன் முகமது இா்பான் உயிரிழந்தாா்.

இளைஞரும், அவரது தந்தையும் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உறவினா்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததை அடுத்து உறவினா்கள் திரும்பிச் சென்றனா். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

1 More update

Related Tags :
Next Story