மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அருவியை பார்வையிடுவதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.


Next Story