இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 March 2025 8:02 PM IST
மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,644-ஐ ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 29 March 2025 6:17 PM IST
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
- 29 March 2025 1:48 PM IST
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டு மக்களின் மிகவும் விருப்பம் நிறைந்த முதல்-அமைச்சர் வேட்பாளர் பட்டியலில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முதலிடமும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
- 29 March 2025 1:46 PM IST
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
உதவி எண்கள்: 1800 309 3793, +91 80690 09901, +91 80690 09900
மின்னஞ்சல்: nrtchennai@gmail.com
- 29 March 2025 1:05 PM IST
சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- 29 March 2025 12:59 PM IST
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் கேர்லாபால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வன பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
- 29 March 2025 12:55 PM IST
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதி வழங்கவில்லை என மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
1,170 இடங்களில் 100 நாள் வேலைக்கு செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.






