இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024


LIVE
தினத்தந்தி 19 Dec 2024 9:03 AM IST (Updated: 19 Dec 2024 8:54 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 19 Dec 2024 7:31 PM IST

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தினால் உடனடியாக விடுவிக்கப்படுவர் இல்லையெனில் 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 19 Dec 2024 7:23 PM IST

    ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதி, தறிப்பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விசைத்தறி கூடங்களுக்கு இலவச மின்சார யூனிட் உயர்த்தியது பலனளிக்கிறதா என முதல்-அமைச்சர் கேட்டறிந்தார் மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • 19 Dec 2024 7:03 PM IST

    சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (வயது 54) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என புதிய படத்தை இயக்கியுள்ள அவர், அப்படத்தின் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

  • 19 Dec 2024 7:00 PM IST

    2025 மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ்ஜில் 300 படுக்கைகள் கொண்ட தங்கும் சொகுசு விடுதியை உத்தரபிரதேச அரசு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 19 Dec 2024 6:48 PM IST

    அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சியின்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

  • 19 Dec 2024 6:39 PM IST

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான, கல்யாண சுந்தரம் என்கிற வைரவேல் (35) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

  • 19 Dec 2024 6:25 PM IST

    மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் 2 பேர் பலி

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமுற்ற 3 பேர் ஏற்கனவே மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரிகளைத்தேக்கும் பங்கர் டேங்க் சரிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 19 Dec 2024 6:21 PM IST

    சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் கடலில் விழுந்த ஓட்டுநர் முகமது சகி உயிரிழந்தார். கடலுக்குள் மாயமான ஓட்டுநரை நேற்று முதல் தேடி வந்த நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சென்னை துறைமுகத்தில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடற்படை வீரரை அழைத்து செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து கார் கடலில் கவிழ்ந்தது. கொடுங்கையூரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் முகமது சகி என்பவர் காருடன் கடலில் மூழ்கினார். கார் கடலில் மூழ்கிய நிலையில் கண்ணாடியை உடைத்து கடற்படை வீரர் வெளியே வந்து தப்பித்தார்.

  • 19 Dec 2024 6:15 PM IST

    காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை அதிநவீன ஒப்புயர்வு மையமாக தமிழக அரசு தரம் உயர்த்தியுள்ளது

  • 19 Dec 2024 6:08 PM IST

    அமித்ஷா பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டார். அமித்ஷா விவகாரத்தில், ஜெயக்குமார் கூறிய கருத்தே எனது கருத்து என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story