இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Feb 2025 1:42 PM
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுத்து நிறுத்தவேண்டும். கோவை அருகே சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 18 Feb 2025 1:40 PM
வேலூர்: பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம்.
- 18 Feb 2025 1:37 PM
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 18 Feb 2025 1:35 PM
கோவை: மருதமலை முருகன் கோவிலுக்கு பிப்.20-ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. பிப்.20-ஏப்.06ம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பைக்கில் செல்ல அனுமதியில்லை. மலைப்படிகள் வழியாகவும், கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஏப்.04ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- 18 Feb 2025 1:34 PM
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடினார் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண்.
- 18 Feb 2025 12:35 PM
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் அறிவிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 18 Feb 2025 12:15 PM
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக வலுவான கண்டனக் குரல்களை எழுப்ப உள்ளோம். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதற்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
- 18 Feb 2025 12:11 PM
பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதல்-அமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதல்-அமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் 'அப்பா' எனும் அன்புச் சொல் உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல்படுங்கள் பழனிசாமி. பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- 18 Feb 2025 11:53 AM
ரூ.2,151 கோடி கிடைக்கும் வரை தமிழக அரசு போராடும். 43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக திமுக அரசு மீது மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. மாநில கல்விக்குழு விவாதித்து அதன் பிறகே கையொப்பம் இடுவோம் என்று தெளிவாக கூறினோம் என்று சென்னையில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசி உள்ளார்.