இன்றைய செய்திகள் சில வரிகளில்..
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2024 4:30 PM IST
சிங்கப்பூர் அதிபர் ஜனவரி மாதம் ஒடிசா வருகிறார்
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், ஜனவரி மாதம் ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.
ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 Dec 2024 4:10 PM IST
'அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்' - விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு
அரசியல் பயணத்தில் விஜய் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது, நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியிருக்கிறது என்றும், அவர் அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 10 Dec 2024 1:54 PM IST
அதிமுக எம்.பி. தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் பதிவிட்டுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார். ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார் தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன- எடப்பாடி பழனிசாமி
- 10 Dec 2024 12:20 PM IST
*நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
*அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி போராட்டம்
*ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
*எதிர்க்கட்சிகள் அமளியால், மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு
- 10 Dec 2024 12:10 PM IST
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது- வானிலை ஆய்வு மையம்
- 10 Dec 2024 10:20 AM IST
*விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தெரியாது என்று பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன்
*எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு "எனக்கு தெரியாது" என திருமாவளவன் பதிலளித்துவிட்டு சென்றார். விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.