துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

கோப்புப்படம்
துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவத்தின் முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 23.11.2024 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story