திரூப்பூரில் மூவர் கொலை விவகாரம்; வதந்திகளை நம்ப வேண்டாம் - காவல்துறை விளக்கம்

திருப்பூர் கொலை வழக்கு விவகாரத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குறவர் இனத்தை சேர்ந்த சிலரை போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பணம் தருவதாகவும் கூறி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு சித்ரவதை செய்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறுகிறது என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






