விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

மைக் செட் வயரை கட்டும்போது உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டதால் விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது மைக்செட் வயர் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மனைவி லலிதா (25) பாட்டி பாக்கியம் (65) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களை காப்பற்றச்சென்றபோது கவின், தர்மர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story