திருவள்ளூர்: முருகன் கோவிலில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு


திருவள்ளூர்: முருகன் கோவிலில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
x

பட்டறை பெரம்புதூர் முருகன் கோவிலில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள பட்டறை பெரும்புதூர் கிராமத்தில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள முருகன் கோவில் அருகே தோண்டியபோது, அங்கு சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பாதை சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவலங்காடு நடராஜர் கோவிலை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story