உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை: சென்னை ஐகோர்ட்டு கருத்து


உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை: சென்னை ஐகோர்ட்டு கருத்து
x

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்களை சாம்சங் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

இதையடுத்து சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது; உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, முழக்கம் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை வருகின்ற 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story