தேனி: நேருக்கு நேர் வேன்-பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி


தேனி: நேருக்கு நேர் வேன்-பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2025 2:45 AM (Updated: 14 Feb 2025 6:33 AM)
t-max-icont-min-icon

பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன் - பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேனி,

கிருஷ்ணகிரியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தது. . இதனிடையே சபரிமலையில் இருந்து பகதர்களை ஏற்றிக்கொண்டு ஓசூருக்கு திரும்பிய வேன் ஒன்று தேனி அருகே சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக வேன் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் இரண்டு வாகனத்திலும் பயணித்த பக்தர்கள் பலத்த காயத்துடன் விழுந்துகிடந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story