விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்


விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்
x

விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் கடந்த 6-ம் தேதி நடந்த சட்டமேதை அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, '2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க தயாராகிவிட்டார்கள்' என்று தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து 'தி.மு.க.வை ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது தவறு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக குழு ஆலோசித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்' என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா இன்று அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா விலகியது குறித்து, இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே." என்று தெரிவித்துள்ளார்.


Next Story