அடுத்த 6 மாதத்தில் ஆட்சி மாறும்: கரூரில் விஜய் சூளுரை


அடுத்த 6 மாதத்தில் ஆட்சி மாறும்: கரூரில் விஜய் சூளுரை
x
தினத்தந்தி 27 Sept 2025 7:48 PM IST (Updated: 27 Sept 2025 7:52 PM IST)
t-max-icont-min-icon

கரூர் வந்த அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் ,

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) மதியம் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார் . தொடர்ந்து கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வந்த அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூரில் பிரசாரம் செய்த விஜய் பேசியதாவது,

காவல்துறையினருக்கு மிக்க நன்றி அவர்கள் இல்லையென்றால் நான் பிரசார இடத்திற்கு வந்திருக்க முடியாது. கரூரை பற்றி பேச நிறைய பெருமையான விஷயங்கள் உள்ளன. திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை . கரூர் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னார்கள் இன்னும் செய்யவில்லை. கரூரில் ஒருவர் மந்திரி இல்லை என்றாலும் அவர் மந்திரி மாதிரி செயல்படுகிறார். பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய்,. அவர் பெயர் நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா .

கரூரில் விமான நிலையம் கட்டினால் ஜவுளி தொழிலுக்கு உதவியாக இருக்கும். மணல் கொள்ளை தான் கரூரில் முக்கிய பிரச்னை. மணல் கொள்ளையர்களிடம் இருந்து கரூருக்கு விடுதலை வேண்டும்.தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி கரூரில் இருக்கும் பஞ்சபட்டி ஏரி. அதன் பரப்பரளவு 1000 ஏக்கருக்கு மேல். ஆனால், அதனை பல வருடங்களாக சீரமைக்கால் வைத்துள்ளனர். தவெக ஆட்சி வரும்;அன்று பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும். உங்கள் முகத்தில் நிம்மதி சந்தோஷம் எல்லாம் சேர்ந்து வரும். காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதத்தில் ஆட்சி மாறும். காட்சி மாறும். நம்பிக்கையாக இருங்க . வெற்றி நிச்சயம். என தெரிவித்தார்.


1 More update

Next Story