ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாக குழுக் கூட்டம் தொடங்கியது


ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாக குழுக் கூட்டம் தொடங்கியது
x

கோப்புப்படம் 

பாமக நிர்வாக குழுவில் ராமதாசின் மகள் காந்திமதி இடம்பெற்றுள்ளார்.

விழுப்புரம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த குழுவில் ராமதாசின் மகள் காந்திமதி இடம்பெற்றுள்ளார். 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி தரப்பு பதில் தராத நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story