தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு


தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Jan 2025 1:58 AM (Updated: 31 Jan 2025 7:38 AM)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து நடிகர் விஜய் அறிவித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதற்காக மாங்காடு போலீசாரிடம் அனுமதி பெற்று தவெகவினர் அந்தபகுதிகளில் பேனர்களை வைத்திருந்தனர்.

உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தும் நிலையில் அதிக அளவில் பேனர்களை வைத்திருப்பதாக போலீசார் பேனர்களை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றுவதாக தவெகவினர் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி பாதுகாப்பான முறையில் சாலையோரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மற்ற கட்சியினர் போல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கவில்லை எனவும் போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக தவெகவினர் குற்றம் சாட்டினர்.

மேலும் 2 பேனர்கள் வைக்க மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்ததாகவும் அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்ததாகவும் 2 பேனர்கள் மட்டும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story