தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, வெறிநாய் மற்றும் சொறி நாய் கடிகள் அதிகரித்துவரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அதற்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சியமைந்த பின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 686 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story